கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் பெரியமுத்தூர் அருகே சேர்ந்த 15 வயது சிறுமி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சம்வம் அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு வர வரவிலை அவரை பல இடங்களில் தேடியும் இல்லாததால் கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதில் வாலிபர் ஒருவர் தங்களது மகளை காதலித்து வந்தார். அந்த வாலிபர் மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.