பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்ஷா (50) ஜவுளி வியாபாரி. இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெரு பகுதியில் வசித்து வருகிறார். அந்த நிலையில் சம்பவம் அன்று இவர் குப்பைமேட்டு தெரு அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த 3 பேர் இவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். மனோஜ்ஷா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் மனோஜ்ஷாவை தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெருவை சேர்ந்த தீபக் (24) என்பவரை கைது செய்தனர். வெங்கடாபுரம் ரித்திக் (25) குப்பை மேடு அப்பு (26) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.