கிருஷ்ணகிரி: உலக நுகர்வேர் உரிமைகள் விழிப்புணர்வு தினவிழா

76பார்த்தது
கிருஷ்ணகிரி: உலக நுகர்வேர் உரிமைகள் விழிப்புணர்வு தினவிழா
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு தினவிழா நடைப்பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுதாய நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் குறித்து பள்ளி மாணவிகள் மத்தியில் உரை ஆற்றிய டாக்டர் சந்திரமோகன்: எந்த ஒரு பொருள்கள் வாங்கினாலும் அதற்கு உரிய பற்றுச்சீட்டுகள் கேட்டு வாங்கும் பழக்கம் வரவேண்டும். 

பற்றுச்சீட்டுகள் தரமறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க தயக்கம் காட்டக்கூடாது. குறிப்பாக முன்னால் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் நாட்டில் பெருமளவில் ஊழல் குற்றம் தடுக்கப்பட்டுள்ளதாக அமரர் ராஜீவ் காந்திக்கு புகழாரம் சூட்டினார். இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு விழாவில் ஆசிரியர் கவிதா, சிறுபான்மை நுகர்வோர் சங்க தலைவர் டேனியல் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் முபாரக் பாஷா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி