ஊத்தங்கரை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியல்.

84பார்த்தது
ஊத்தங்கரை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் கிழிந்த பேனருடன் சாலை மறியல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் வைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாடு பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தினக்கூலிகள் அரசு அலுவலகப் பணியாளர்கள் போக்குவரத்து பாதிப்பால் தாமதமாகச் சென்றனர்.
தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிசிடிவி புட்டேஜ் மூலம் மர்ம நபர்களை கண்டறிந்து உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதன் பிறகு அக்கட்சியினர் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி