கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்கள் பஸ் நிலையத்திலிருந்து பள்ளிவரை, விவசாயம், போதைப் பொருட்களை தவிர்த்தல், பெண் பாதுகாப்பு ஆகியவை குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல்லிட்டு கொண்டாடினர். மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.