ஊத்தங்கரை: போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

55பார்த்தது
ஊத்தங்கரை: போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.ஐ., சாந்தசீலன் கலந்துக்கொண்டு அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 4-வழி சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை சென்றடைந்தது. மாணவிகள், போதை ஒழிப்பு தொடர்பான பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 'போதையை தவிர்க்க கல்வி அவசியம்', 'புகைப்பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்', 'போதை தொடாதே சாதனை படைப்போம்' போன்ற கோஷங்கள் முழங்கின. இதில் திரளான பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி