தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

63பார்த்தது
தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டிணம், கிங்ஸ் அரிமா சங்கம் மற்றும் தேசிய பசுமைபடை சார்பில் காவேரிப்பட்டிணம் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். சிறப்பு. விருந்தினராக தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுப்பிரமணியபுரம் கிராமபகுதியில் சுமார் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி