ஊத்தங்கரையில் டி. என். பி. எஸ். சி,
ஓ. எம். ஆர் எளிய முறையில் பயன்படுத்துவது குறித்து பயிற்சி.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது இத்தேர்வில் கையெழுத்து மாறுபடுதல் கையெழுத்து போடாமல் விடுவதால் அதிக அளவில் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்காக
தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது, அதன் அடிப்படையில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் வருவாய் துறை சார்பில்
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் டி. என். பி. எஸ். சி ஓ. எம். ஆர் ஷீட் எளிய முறையில் பயன்படுத்துவது பற்றி பயிற்சிகள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மண்டல துணை வட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பிரிவு அலுவலர் நேரு, உதவிப் பிரிவு அலுவலர் குணசேகரன் ஆகியோர்
கலந்து கொண்டு ஓ. எம். ஆர் ஷீட் எளிய முறையில் மாற்றப்பட்டுள்ளது, பயனாளிகள் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டை ஊத்தங்கரை கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம் ஆகியோர் செய்திருந்தனர்.