அம்மன் கழுத்தில் இருந்த 12 கிராம் தங்க தாலிகள் திருட்டு.

60பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த தட்டரஅள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ கக்கு மாரியம்மன் கோவில் உள்ளது. சமிபத்தில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி 09-12-24 அன்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சிறப்பு ஸ்ரீ கக்கு மாரியம்மன்க்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டனர். பூஜையின் போது பக்தர்கள் அம்மனுக்கு 10 கிராம் தாலி குண்டுமணி செய்து அம்மனுக்கு அணிவித்து இருந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் பூசாரி கண்ணன் என்பவர் இன்று அதிகாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த போது கோவிலின் கருவறை பூட்டை உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்து இது குறித்து ஊர் பொது மக்களுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் ஊர் மக்கள் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க தாலி குண்டுமணிகளை கயிற்றோடு எடுத்துச் சென்று கோவில் அருகே குண்டு மணிகளை எடுத்துக்கொண்டு மஞ்சள் தாலிக்கயிறை அங்கேயே துண்டு துண்டாக கட் செய்து தரையில் வீசி சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி