ஊத்தங்கரை அருகே சிறுமி மாயம் பெற்றோர் போலீசில் புகார்.

60பார்த்தது
ஊத்தங்கரை அருகே சிறுமி மாயம் பெற்றோர் போலீசில் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி அருகே உள்ள கஞ்ச னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ்-2 முடித்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த சிறுமி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். அப்போது சிறுமியை இதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (22) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பான சிறுமியின் பெற்றோர் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
>

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி