தாய் சேய் நல வாகனத்தின் சாவியை கலெக்டர் வழங்கினார்

51பார்த்தது
தாய் சேய் நல வாகனத்தின் சாவியை கலெக்டர் வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் டாடா நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் 25 இருக்கைகள் கொண்ட தாய் சேய் நல வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு, இ. ஆ. ப, அவர்களிடம், தளி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் திரு. ஆர். வி. சி. பதி அவர்கள் இன்று (04. 09. 2024) வழங்கினார். உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு. ராஜேஷ்குமார், குழு நிர்வாகி திரு. ஆதிகேசவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி