கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவோம் மாணவர்களின் திறனறி திருவிழா. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற மாணவர் திறனறி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மத்தூர் வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி தலைமை தாங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர் சரவணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவக்குமார் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கு முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய ஸ்கூல் பேக் வழங்கி வரவேற்கப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.