மாநிலத் தலைவர் பி. எல். ஏ ஜெகநாத்மிஸ்ரா செட்டியார் பேட்டி.

85பார்த்தது
24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நூற்றாண்டு மாபெரும் மாநாடுக்கு அழைப்பு.

24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நூற்றாண்டு மாபெரும் மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலம் ஓமலூர் பைபாஸில் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மாநிலத் தலைவர் பி. எல். ஏ ஜெகநாத்மிஸ்ரா செட்டியார் சுற்று பயணம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகோபனபள்ளியில் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி பிறந்த இனத்திற்கு பெருமை சேர்த்திட அனைவரும் எம். பி. சி உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பிதழ் வழங்கினார்.
இதில் பெருகோபனப்பள்ளி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்க தலைவர் பி. டி நரசிம்மன், செயலாளர் பி. சி முருகன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் பி. எஸ் சதீஷ்குமார், துணைப் பொருளாளர் ஜெய்சங்கர், உயர் மட்ட ஆட்சி மன்ற குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், சமூக ஆர்வலர் பூபதி, ஒன்றிய கவுன்சிலர் டைகர் பாலு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you