கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதியமான் மகளிர் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத்துறை மற்றும் ஆய்வியல் ஆங்கிலத்துறையின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் திருமால்முருகன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உள்தரவுறுதிப்பிரிவு துணை இயக்குநர் கார்த்திக் குமார் கலந்துகொண்டு டிஜிட்டல் யுகத்தில் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் திரளான பேர்கள் கலந்துகொண்டனர்.