கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா 5. 10. 2023 முதல் 12. 10. 2023 வரை நடைபெறுவதை முன்னிட்டு, மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு. சீ. பாபு அவர்கள் இன்று (08. 10. 2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, இப்பேரணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து ராயக்கோட்டை பைபாஸ் வழியாக விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் தீயணைப்பு துறை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி NSS, scouts, மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்
மேலும், இப்பேரணியில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இப்பேரணியில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் திரு. மகாலிங்க மூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் திரு. வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. மகேஷ் குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. விஜயலட்சுமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. மகேந்திரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ரமேஷ் குமார், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு. விஜயகுமார், மண்டல துணை வட்டாட்சியர் திருமதி. மகேஸ்வரி, நிலை அலுவலர் திரு. சக்திவேல், வருவாய் ஆய்வாளர்கள் திரு. குமரேசன் திருமதி. புஷ்பலதா, திரு. குமார், திரு. குசேலகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் திரு. கிருஷ்ணன், திரு. நிதிஷ், விளையாட்டு துறை மேலாளர் திரு. சுப்பிரமணி, அறிஞர் அண்ணா கலை கல்லூரி முதல்வர் Dr. தனபால், NSS ஒருணைப்பாளர் டாக்டர். ஜெகன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.