கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில், சுமார் 50 வீடுகள் உள்ளன. தொடர் மழையால் பெரிய தம்பி, அலமேலு, பழனியம்மாள், லலிதா, சின்னம்மாள், மலர், ஜெயகொடி உள்ளிட்ட பலரின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் தூங்காமல் குடும்பத்துடன் தண்ணீரில் தத்தளித்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் நேற்று(அக்.24) காலை பாதிக்கப்பட்டவர்களை மாற்று இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.