வட்டார வளர்ச்சி அலுவலதில் நுகர்வோர் காலாண்டு கூட்டம்.

54பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நுகர்வோர் காலாண்டு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பி பிரான்சினா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு நுகர்வோர் சங்க மாவட்ட செயலாளர் காவேரிப்பட்டினம் மாதேஷ் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு  சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர். சந்திர மோகன் அவர்கள் பேசுகையில் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஏற்கனேவே இருந்த பிரேத பரிசோதனை கூடத்தை உடனடியாக செயபடுத வேண்டும், காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நியாய விலை கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புறங்களில் சிறார் திருமணங்களை தடுக்க சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், காவேரிப்பட்டினம் நகரத்தில் தேனீர் கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல புகார்களை கூட்டத்தில் தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, கணக்கர் செண்ணப்பன், தட்டச்சர் நிர்மலா தேவி, சுகாதார மேற்பார்வை அலுவலர் ராஜாமணி, நுகர்வோர் சங்க மாநில துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி