கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு, இ. ஆ. ப, அவர்கள், தளி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இன்று(04. 09. 2024) வழங்கினார். உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.