கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் அமனுல்லா தலைமை வகித்தார். இதில் காவல் ஆய்வாளர் முருகன், சிவானி சில்க்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் சீருடைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.