சின்ன ஆனந்துர் அருகே பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருவணபட்டி ஊராட்சி சின்ன ஆனந்தூரில் பொது பாதை வேண்டி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
சின்ன ஆனந்தூரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர், ஊருக்குள் நுழையும் பொது பாதையை தனியார் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் 50 ஆண்டுகளாக சென்று வந்த (தார் சாலை) பொது வழி பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல சிரமத்துக்கு ஆளாகியுள்ளதால் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தீர விசாரித்து ஆக்கிரமிப்பு வழியை மீட்டுத் தருமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது,