ஊத்தங்கரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு

76பார்த்தது
ஊத்தங்கரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் போலீஸ் ஆய்வாளர் முருகன், தலைமை ஆசிரியர்கள் ஞானபண்டிதன், ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் பூபதி, கூட்டுறவு சங்க தலைவர் தீபக், திட்ட இயக்குநர் நிரஞ்சன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், பொருளாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி