கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், தட்டாள்ளி ஊராட்சி இராமர் கொட்டாய் கிராமத்தில் மாநில நிதிக்குழு மான்யம் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.