கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெற்றது. அதில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் தா. யோகேஸ்வரன், சே. நித்திஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ம. பூஜா, சே. ஸ்ரீவர்த்தனி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் ம. குரு. க. நவீன்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கோ. அகிலா, தா. தாரணி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர்.