கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை நாயக்கனூர் பிரிவு சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் அந்த நபர் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து எம். எல். ஏ. ஆனந்தன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.