ஊத்தங்கரையில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு மணி சந்திப்பில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஊத்தங்கரை திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன் , ரஜினி செல்வம், நகர செயலாளர் பார்த்திபன், நகர அவை தலைவர் தணிகை குமரன் , ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஆசிரியர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சங்கத்தமிழ் சரவணன், திராவிட கட்சியைச் சார்ந்த
பழபிரபு , சிவராஜ், பேரூராட்சி கவுன்சிலர் கதிர்வேல், ஒன்றிய துணை செயலாளர் ஜெயசந்திர பாண்டியன், இளைஞர் அணி இளைய சூரியன், கிளை செயலாளர் பாரூக், டாக்டர் முகில்வாணன், உள்பட திமுக கூட்டணி கட்சியைச் சார்ந்த திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.