கணிச்சி கிராமத்தில் மாசி மகா தேர்த்திருவிழா.

55பார்த்தது
கணிச்சி கிராமத்தில் மாசி மகா தேர்த்திருவிழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி தரப்பு கணிச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள கணிச்சி ஸ்ரீ பெருமாள் சுவாமி 168 - ம் ஆண்டு மாசி மகா தேர்த்திருவிழா நடந்தது. கணிச்சி ஸ்ரீ பெருமாள் சுவாமி துணை கொண்டு நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் மாசி மாதம் 28 ஆம் நாள் இன்று மாசி மகா தேர்த்திருவிழா நடந்தது. இன்று காலை சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது, அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானமும், இரவு விண்ணை அதிரும் வானவேடிக்கையும் அன்னதானமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து திரைப்பட நடன நிகழ்ச்சியும், பண்டாசூரன் வதை தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி