கீழ்குப்பம் ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

647பார்த்தது
கீழ்குப்பம் ஊராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி திருப்பதி தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், வேடியப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜராஜேஸ்வரி, ஒவர்சர் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தடை செய்யப்பட்டது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிக்குழு உறுப்பினர் சுகந்தி தீர்த்தகிரி, துணைத்தலைவர் வசந்தா வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சின்னம்மாள், அர்சயா ரைஸ்மில் உரிமையாளர் விஸ்வநாதன் இந்நிகழ்ச்சிக்கு மஞ்சப்பை இலவசமாக கொடுத்தார். பொதுமக்கள் சீனிவாசன், சிவமணி, திலீப் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி