கிருஷ்ணகிரி: எம். ஜி. ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஊத்தங்கரை நான்கு முனைச் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஊத்தங்கரை நகரச் செயலாளர் சிக்னல் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரும் கழக பொதுக்குழு உறுப்பினருமான தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி