கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி போலீசார் நேற்று முன்தினம் சாமல்பட்டி அடுத்துள்ள கோட்டபதி அடுத்த பாம்பாறு ஆற்றங்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்னர். அங்கு இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் சிலர் மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். போலீசார் கண்டதும் அவர்கள் அங்கிருந்து. தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், இரண்டு டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.