கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்படுத்தும்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
ஆண்கள் கழிவறை பெண்கள் கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளில் உள்ள குழாய்கள் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் கூறினார்
தொடர்ந்துஉணவு தயாரிக்கும் கூடம்
நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரம்
உள் நோயாளிகள் பிரிவு
வெளி நோயாளிகள் பிரிவு
அவசர சிகிச்சை பிரிவு
ரத்த சுத்திகரிப்பு மையம்
சலவை மையம்
தடையற்ற மின் சேவை பிரிவு
ஆக்சிசன் சேமிப்பு மையம்
உள்ளிட்ட வற்றின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ. ஆ. ப அவர்கள் பார்வையிட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனை வளாகத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்
மரு. பூவதி
மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. சந்திரசேகர்
உள்ளிருப்பு மருத்துவ அலுவலர். மரு. செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.