கிருஷ்ணகிரி: பா. ம. க வடக்கு நகர செயலாளராக ஜிம்ராஜ்குமார் நியமனம்

80பார்த்தது
கிருஷ்ணகிரி: பா. ம. க வடக்கு நகர செயலாளராக ஜிம்ராஜ்குமார் நியமனம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போழுது 17 வார்டுகள் உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி பணி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை கட்சி ஆனைக்கினங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மேகநாதன், உழவர் பேரவை மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி, சமூகஊடக பேரவையின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் மூர்த்தி, மாவட்டத் தலைவர் அண்ணாமலை, பேரூராட்சி கவுன்சிலர் குமரேசன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் அக்ரி மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பில்லா மாதேஷ், ஒன்றியச் செயலாளர்கள் வெள்ளியரசு, அருண், சித்தார்த், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஊத்தங்கரை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது, இதில் வடக்கு நகரச் செயலாளராக மீண்டும் ஜிம் ராஜ்குமார் நியமனம் செய்து பொன்னாடை போர்த்திக் கௌரவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி