மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்தி கொன்ற மகன்.

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்மாள் (69). இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் மந்திப்பட்டி கிராமத்தில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கணவரை இழந்து, இரு கால்களும் செயலிலந்த நிலையில் இருந்த இவர் தனியாக சமைத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மூத்த மகன் சக்கரவத்தி, அவரது மனைவி மற்றும் மகன்களை பிரிந்த  நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். அவ்வப்போது தனது தாயார் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் சென்ற சக்கரவத்தி தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் அம்ஷா, ராமலிங்கம்மாளின் சத்தம் வித்தியாசமாக இருப்பதை கண்டு எட்டிப்பார்த்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கத்திக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராமலிங்கம்மாளின் இளைய மகன் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் அங்கு வந்து பார்த்தபோது, கழுத்து பகுதியில் மூத்த மகன் குத்திவிட்டதாக சைகையில் காட்டியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து மத்தூர் காவல் துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்தூர் போலீசார், பிரேதத்தை கை பற்றி மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைத்தனர்.

டேக்ஸ் :