தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை காணொளிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு தலைமையில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் தே. மதியழகன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்தியா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள்.