ஊத்தங்கரையில் கே. பி. எம் பிறந்தநாள் விழா

70பார்த்தது
ஊத்தங்கரையில் அதிமுக துணை பொதுச்செயலாளர்
கே. பி முனுசாமி பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே. பி முனுசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா நகர செயலாளர் சிக்கல் ஆறுமுகம் தலைமையில் கழக பொதுக்குழு உறுப்பினரும்
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருமான
டி. எம் தமிழ்செல்வம்,
பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. இ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். முன்னதாக பட்டாசு வெடித்து எம். ஜி. ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி இளையராஜா,
வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேடி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேங்கன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, ஜீவானந்தம், ராமன்,
முன்னாள் உப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், இளைஞர் அணி அம்ஜத், மற்றும்
மாவட்ட, ஒன்றிய , பேரூர் கழக செயலாளர்கள் கிளை கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி