கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பாடி, மூன்றம்பட்டி, கோவிந்தாபுரம், சிங்காரப்பேட்டை, கீழ் மத்தூர், பெரிய தள்ளப்பாடி, ரெட்டிபட்டி, கெங்கப்பிராம்பட்டி, உப்பாரப்பட்டி, கதவனி, மகனூர்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.