கிருஷ்ணகிரி; அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

67பார்த்தது
கிருஷ்ணகிரி; அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு
சூளகிரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு மருத்துவமனையில் பொதுமக்களின் வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து இருப்பு, ஊசி போடும் அறை, சித்தா பிரிவு, பல் மருத்துவ பிரிவு, கண் பரிசோதனை பிரிவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு வீடு வீடாக சென்று மாத்திரைகள் வழங்கும் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு, மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்தி