இந்தியா கூட்டணி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

82பார்த்தது
இந்தியா கூட்டணி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குமரேசன் தலைமையில்
மத்திய வட்டார தலைவர் திருமால் முன்னிலையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் முன்னதாக பட்டாசு வெடித்து ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, டாக்டர் அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் திமுக பேரூர் கழக அவைத் தலைவர் தணிகை குமரன் காங்கிரஸ் தெற்கு வட்டாரத் தலைவர் கல்லாவி ரவிச்சந்திரன் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் காங்கிரஸ் மாநில தலைவருமான ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி, காங்கிரஸ் நகர தலைவர் விஜயகுமார், பூக்கடை மகி, தமிழ்ச்செல்வன், கம்யூனிஸ்ட் எத்திராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி