கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 20. 10. 2023 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20. 10. 2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10. 00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு தலைமையில் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் கோவிட்-19 வழிகாட்டுதலை தவறாது கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார்.