தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக ஜனவரி 4 அன்று மாவட்ட நூலக அலுவலக வளாகத்தில் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் என். எஸ் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணன், மாநில பொருளாளர் நந்தகுமார், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், சிறப்பு நிகழ்வாக மாநில மைய நாட்காட்டி (காலாண்டர்) வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து கூறிய மாவட்ட நூலக அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருளாளர்
செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.