கிருஷ்ணகிரி திமுக சார்பாக இன்று (டிச.30) கிருஷ்ணகிரி தனியார் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கே. மதியழகன் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓய். பிரகாஷ் ஓசூர் மேயர் சத்யா கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்