கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு 14. 10. 2023 அன்று சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் 13. 10. 2023-க்குள் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் தகவல்.
ஒவ்வொரு ஆண்டும் காலஞ்சென்ற தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ/மாணவியருக்கு கீழ்கண்ட வயதுப்பிரிவுகளில் 14-10-2022 அன்று காலை 6. 00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க மைதானத்திலிருந்து புறப்பட்டு கங்கலேரி கூட்ரோடு பெட்ரோல் பங்க் வரை சென்று ஸ்டேடியம் திரும்பி வருமாறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
போட்டிகள் நடத்தப்படும் விவரம்.
13-வயது பிரிவு: மாணவிகளுக்கு 10 கி. மீ தூரம் ஸ்டேடியத்திலிருந்து கெங்கலேரி கூட்ரோடு பெட்ரோல் பங்க் வரை சென்று ஸ்டேடியம் திரும்பி வரவேண்டும்.
13-வயது பிரிவு: மாணவர்களுக்கு 15 கி. மீ தூரம்
ஸ்டேடியத்திலிருந்து மூங்கில் பூதூர், பாரத கோயில் வரை சென்று ஸ்டேடியம் திரும்பி
வரவேண்டும்.
15-வயது பிரிவு: மற்றும் 17-வயது பிரிவு: மாணவிகளுக்கு15 கி. மீ தூரம் ஸ்டேடியத்திலிருந்து மூங்கில் பூதூர், பாரத கோயில் வரைசென்று ஸ்டேடியம் திரும்பி வரவேண்டும்.
15-வயது பிரிவு: மற்றும் 17-வயது பிரிவு: மாணவர்களுக்கு 20 கி. மீ தூரம் ஸ்டேடியத்திலிருந்து இட்டிக்கல் அகரம் பஸ் ஸ்டாப் வரை சென்று ஸ்டேடியம் திரும்பி வரவேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 5000/- ரூ. 3000/- மற்றும் ரூ. 2000/-வீதமும் 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு ரூ. 250/- வீதமும் மற்றும் தகுதிச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் சொந்த செலவில், இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 13-10-2023 மாலை 6. 00 மணிக்குள் தகுந்த சான்றிதழ்களுடன் (பிறந்தநாள் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல்) மாவட்ட விளையாட்டு அலுவலகம் கிருஷ்ணகிரியில் நேரில் வந்து தங்களின் பெயரினை பதிவு செய்துகொள்ளும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Spot Entry Not allowed மேலும் தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களை தொலைபேசியில் (7401703487) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.