கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரபேட்டை, அத்திப்பாடி, நடுப்பட்டு, வெள்ளகுட்டை, நாய்கனூர் உள்ளிட்ட ஊராட்சியைச் சேர்ந்த
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிங்காரபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது,
இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர்கள் அகமத் பாஷா, குப்புசாமி , சுதா குமார் , சரஸ்வதி விஜயன், சரோஜா சின்னசாமி ஆகியோர் ஏற்பாட்டில்
வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தவமணி, வட்டாட்சியர் திருமால் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இம்முகாமில் வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்பதால் இந்த முகாமில் கூட்டம் குவிந்தது.
இதில் சிங்காரபேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார், திமுக மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், கவுன்சிலர் ஜாவித்,
மற்றும் மின் வாரிய துறை சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை, தோட்டக்கலைத் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர், இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.