குழந்தை தெரசாள் ஆலயத்தின் 9-ம் ஆண்டு தேர் திருவிழா

882பார்த்தது
குழந்தை தெரசாள் ஆலயத்தின் 9-ம் ஆண்டு தேர் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் ஒன்றியம், புஷ்பகிரியில் அமைந்துள்ள
குழந்தை தெரசாள் ஆலயத்தின் 9-ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் ஒன்றியம், புஷ்பகிரியில் அமைந்துள்ள
குழந்தை தெரசாள் ஆலயத்தின் 9-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 5-ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலை 6-00 மணிக்கு ஜெபமாலையும், வேண்டுதல் தேர் பவனியுடன்
திருப்பலி நிகழ்சிகள் நடைபெற்றது.
இன்று காலை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில்
திருவிழா திருப்பலி சிறப்புடன் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று மாலை 6-00 மணியளவில் வான வேடிக்கைகளுடன், வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி
நடைபெற்றது. இதனை, மறைவட்ட முதன்மை குரு அருட்பணி. இருதயநாதன்
மந்தரித்து, துவக்கி வைத்தார்.
இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுப்தார் மேடு
மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பங்குத்தந்தை. தேவசகாய சுந்தரம் மற்றும்
பங்கு பேரவையினர், பங்கு மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி