கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள புதூர் புங்கனை கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பால் கொள்முதல் கட்டிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டில் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த கட்டிடம் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டப்பட்ட அந்த கட்டிடம் தற்போது வெறும் காட்சி பொருளாக உள்ளது.