தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் (பதிவு) ஊத்தங்கரை கிளையின் மாதாந்திர கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் சுப்பு ஐயர் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பிரமணிய சிவம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், பாலாஜி, ராம், விஷ்ணு பிரியன், எஸ். ஏ. சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மணிகண்டன் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோவை சிஜிவி கணேசனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு சாதனை படைத்த கோபாலகிருஷ்ணன் அனுதம்பதியரின் மகள் தேசிகாவிற்கு ஊக்கத் தொகை ரூபாய் 5000 ரொக்கமாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தர சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்தும் சங்க வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. சேஷாத்ரி ராம் வாசுதேவன் அனு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் விஷ்ணு பிரியன் நன்றி கூறினார்.