ஊத்தங்கரை அருகே வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

71பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சுற்றுலாதனமாக விளங்கும் அங்குத்தி சுனையில் தமிழ் நாடு வனத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவு படி நடைபெற்றது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் ரமேஷ், கலந்து கொண்டு இயற்கை வனத்தை பற்றியும் மற்றும் மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் உபயோக படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் மன்னகம் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் சுரேந்தர் மரங்களாளும் வனவிலங்குகளாளும் ஏற்படும் நன்மைகள் பற்றியும் , நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கலைநிகழ்ச்சி நடத்தினர். அதனைத் தொடர்ந்து இயற்கையோடு வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் சார்ந்து வாழ்வதை குறித்து மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானவ மாணவிகளுக்கு புத்தகங்கள் கைப்பைகள் வழங்கப்பட்டது வனவர்
கிருஷ்ணமூர்தி, வனக்காப்பாளர் சிவக்குமார், முருகன், பாரதிதாசன், மண்ணகம் தொடு நிறுவனர் சுரேந்தர் குக்கூ தொண்டு நிறுவனர் முத்து சுழல் சுற்றுலா குழு தலைவர் பெரியண்ணன் தலைமைஆசிரியர் தன்னார்வலர்கள் சமுக ஆர்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் தொண்டு நிறுவன ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி