கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு

68பார்த்தது
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு.கிருஷ்ணகிரிபாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்குஇந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். 2024ஆம் வருடத்தில்ஆண்டில் பல்வேறு கல்வி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள், காலண்டர், இனிப்பு, உணவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வயதில் மூத்த மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகள் ஆகியவற்றை வழக்கறிஞர் மூர்த்தி, மாற்றுத்திறனாளிகளின் நல விரும்பிகள் ஹர்ஷிதா, விஷ்ணுபிரியன், ஆனந்தகுமார் ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சக்தி, உமா, பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளி திருப்பதி வரவேற்றார். மாற்றுத்திறனாளி திம்மையன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகளின் சிறப்பாசிரியர்சிறப்பு ஆசிரியர் மாதம்மாள் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி