ஒசூர் உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத் துறையினரின் அதிரடி ஆய்வு.
தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு ஆணையர் திரு. லால்வேனா, IAS, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சரயு, IAS, ஆகியோர் அளித்த உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். வெங்கடேசன் அறிவுரையின்பேரில் ஒசூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் சூளகிரி உணவுப்பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர், தளி உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், ஆகியோர் ஒசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது ஒசூரில் இயங்கிவரும் சில அசைவ உணவகங்களில் முந்திய நாட்களில் தயாரித்து விற்கப்படாத சுமார் 6 கிலோ தந்தூரி சிக்கன் மற்றும் 18 கிலோ மட்டன் & சிக்கன் பிரியானி ஆகிய உணவுப் பொருட்களை குளிர்சாதனைப்பெட்டியில் வைத்து பொதுமக்களுக்கு மறுநாட்களில் விற்பனை செய்வதை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சில உணவகங்களில் சந்தேகத்திற்குட்பட்ட சிக்கன் ரைஸ் மற்றும் மட்டன் பிரியானி போன்ற உணவுப் பொருட்களிலிருந்து உணவு மந்திரிகளாக சேகரித்து அவற்றை உணவுப் பரிசோதணைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒசூரில் உள்ள சில பேக்கரி மற்றும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட சுமார் 4 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு மற்றும் பாகலூர் ரோடு பகுதிகளில் உள்ள சில டீ கடைகளில் ஆய்வின்போது 3 கிலோ கலப்பட டீத்தூள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுகுறித்து *ஒசூர் உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன்* கூறும்போது கெட்டுப்போன தந்தூரி சிக்கன், மட்டன் & சிக்கன் பிரியானி மற்றும் கலப்பட டீத்தூள் விற்றவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ. 2000/- வீதம் 4 கடைக்காரர்களுக்கு ரூ. 8000/- வரை அபராதம் விதிக்கப்பட்டது என்றும் உணவுப்பாதுகாப்பு உரிமம் இல்லாமல் நடத்திவரும் உணவு வணிகர்களுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 50000 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச்சட்டம் 2006ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.