ஊத்தங்கரையில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முனியப்பன் கோவில் அருகில் அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் RC. தங்கமுத்து தலைமையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது
தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி ஊத்தங்கரை முனியப்பன் கோவில் அருகில் இருந்து ஊத்தங்கரை ரவுண்டானா வரை நடை பயணமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்க பணியில் ஈடுபட்டனர்
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் குணசேகரன், பழனி,
அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி, ஒன்றிய இளைஞர் அணி துரைராஜ், பேரூர் கழக மாணவரணி செயலாளர் சம்பத் மற்றும் கிருஷ்ணன், சக்தி, வெங்கடேசன், கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.