12 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து விற்றவர் கைது.

57பார்த்தது
12 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து விற்றவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்துள்ள ராமச்சந்திரம் பகுதியில் கணேஷ் (38) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு சம்பவம் அன்று தகவல் வந்தின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் அந்த வீட்டில் 12 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி